Home » சினிமா » புஷ்பா இஸ் கம்பேக்… அல்லு அர்ஜுனின் “புஷ்பா தி ரூல்” படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

புஷ்பா இஸ் கம்பேக்… அல்லு அர்ஜுனின் “புஷ்பா தி ரூல்” படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

புஷ்பா இஸ் கம்பேக்… அல்லு அர்ஜுனின் "புஷ்பா தி ரூல்" படத்தின் மிரட்டலான டீசர் வெளியீடு., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் “புஷ்பா தி ரூல்” படத்தின் டீசர் வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் தான் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் புஷ்பா. இப்படத்தில் அவருடன் சேர்ந்து  ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தனர். பான் இந்திய படமாக வெளியான இப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடிக்கு மேல் வசூலையும் வாரி குவித்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றீயா மாமா” பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டானது. அதுமட்டுமின்றி இப்படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இதனை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு புஷ்பா தி ரூல் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில் புஷ்பா தி ரூல் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா தி ரூல் படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

என் மகன் 20 தோசை சாப்பிடுவான் – நீயா நானாவில் டிரெண்டான 22 வயது இளைஞர் – ரயிலில் அடிபட்டு மரணம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top