அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பார்க்கச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி வியாழக்கிழமை காலை மரணம் அடைந்ததாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
புஷ்பா 2 பார்க்கச் சென்ற பெண் மரணம் – தீவிர சிகிச்சையில் குழந்தைகள் !
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் புஷ்பா 2 உருவாகியுள்ளது. இப்படத்தில் அவருடன் சேர்ந்து ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் சேர்ந்து நடித்திருந்தனர். எனவே மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் இன்று காலை திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என ரூ. 1,000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இந்த படம் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லாததால் இப்படம் முதல் காட்சி காலை 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் நெஞ்சை பதறவைக்கும் அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. அதாவது, புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்ப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் கணவர், குழந்தைகளுடன் அதிகாலையிலேயே சென்றுள்ளனர்.
சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை – அடக்கடவுளே என்ன ஆனது அவருக்கு?
பெண் ஒருவர், கூட்ட நெரிசலில் ரேவதி (வயது 39) மயக்கம் அடைந்தார். இதனை தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்