புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு. சென்னையில் உள்ள புழல் சிறையில் துணை ஜெயிலராக இருந்த சரண்யா என்பவரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி உத்தரவிட்டார். இதன் படி டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரண்யா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறையில் எரிவாயு சிலிண்டர்களை கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மேலும் இந்த முறைகேடு குறித்து கோவை சிறை டி.ஐ.ஜி. விசாரணை நடத்தி வருவதாகவும், அதன் காரணமாக சரண்யா பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
இதனையடுத்து சரண்யா தரப்பில், தான் சிலிண்டர் முறைகேடு செய்பவர்களுக்கு இடையூறாக இருந்ததால் தனக்கு எதிராக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. அத்துடன் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறையில் சிலிண்டர் முறைகேடு நடந்துள்ளது மிகவும் தீவிரமானது எனவும், இதனை கோவை சிறை டி.ஐ.ஜி. தனது விசாரணையை விரைவாக முடித்து அதன் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் ! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து – முழு தகவல் இதோ !
மேலும் சிறைத்துறையினர் சார்பில் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, துணை ஜெயிலராக இருந்த சரண்யாவை பணியிலிருந்து விடுவித்து சிறைத்துறை டி.ஜி.பி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.