பொழுது போக்கிற்காக மக்கள் செல்லும் தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund கிடைக்கும் என்று சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது.
சினிமா தியேட்டர்:
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிற்க கூட நேரம் இல்லாமல் வேலை பார்த்து வருகின்றனர். பல மன அழுத்தங்களை சந்தித்து தான் வேலை செய்து வருகிறார்கள். இதனால் பொழுது போக்கிற்காக தேடி அலைகின்றனர். அதிலும் குறிப்பாக, பெரும்பாலன மக்கள் திரையரங்குகளுக்கு செல்கின்றனர். அங்கு சென்று 3 மணி நேரம் சந்தோஷமாக பொழுதை கழிக்க தான் திரையரங்குகளுக்கு போகின்றனர்.
தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund?.., குஷியில் சினிமா பிரியர்கள்!!
ஆனால் ஒரு சில படங்கள் பார்வையாளர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்கி விட்டதால் எப்போது படம் முடியும் என வேண்டா வெறுப்பாக தியேட்டரில் அமர்ந்திருப்பார்கள். ஏன் நான் கூட அப்படி உட்கார்ந்து இருந்த படங்களும் உள்ளது. இந்நிலையில் நமக்காகவே தற்போது சூப்பர் திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது. திரையரங்கில் எவ்வளவு நேரம் படம் பார்க்கிறோமோ அதற்கு மட்டும் கட்டணம் செலுத்தும் வகையிலான திட்டம் கொண்டு வர இருக்கிறது. இந்தியாவின் முன்னணி திரையரங்கமான PVR மற்றும் INOX கடந்த 2023 ஆம் முதல் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் மேற்கண்ட திட்டத்தை சோதனை செய்து வருகிறது.
டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!
இந்த திட்டப்படி, AI தொழில்நுட்ப உதவியுடன் திரையரங்கில் உள்ள இருக்கைகள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் பார்வையாளர் எவ்வளவு நேரம் தந்து இருக்கையில் அமர்ந்து படம் பார்த்துள்ளார் என அறிய முடியும். அவர் படம் பார்த்த நேரத்தை பொறுத்து மீதமுள்ள பணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பலன் பெற வேண்டும் என்றால், உங்கள் டிக்கெட்டின் கட்டணத்தை விட 10% கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடைமுறை தற்போது, டெல்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் ஒரு சில தியேட்டரில் ஒளிபரப்பாகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!
2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!
அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!