புரிஞ்சா சரி.., பிக்பாஸில் இருந்து வெளியேறிய தினேஷிடம் ரக்ஷிதா கூறியது என்ன? ஷாக்கிங் பதிவு வைரல்!!
சின்னத்திரையில் ரீல் ஜோடியாக நடித்து பின்னர் ரியல் ஜோடியாக பல நட்சத்திரங்கள் மாறியுள்ளனர். அந்த வகையில் தினேஷ், ரக்ஷிதா ஒரே சீரியலில் சேர்ந்து நடித்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்து, தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று தினேஷ் பல முயற்சிகளை எடுத்த போதிலும், எல்லாமே தோல்வியிலேயே முடிந்தது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7ல் தினேஷ் போட்டியாளராக கலந்து கொண்டு இறுதி வரை சென்றிருந்தார். இந்நிலையில் ரக்ஷிதா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதாவது அந்த பதிவில் புரிஞ்சா சரி.., நோ மீன்ஸ் நோ என்று பதிவிட்டுள்ளார். இதை வைத்து பார்க்கும் பொழுது ரக்ஷிதா தினேஷை அடியோடு ஒதுக்கிவிட்டார் என்று தான் தெரிகிறது. இந்த அளவுக்கு தினேஷை ரக்ஷிதா வெறுப்பதற்கு அவர் என்னதான் செய்தார் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.