எண்டுக்கு வந்த தினேஷ் காதல்.., இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரஷிதா? அதுவும் இந்த இயக்குனரோடையா?எண்டுக்கு வந்த தினேஷ் காதல்.., இரண்டாவது திருமணத்திற்கு தயாரான ரஷிதா? அதுவும் இந்த இயக்குனரோடையா?

தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை ரஷிதா. அவர் தன்னுடன் சேர்ந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களுடைய காதல் கல்யாணத்திற்கு பிறகு கொஞ்ச காலத்திலே குறைந்த நிலையில், ஒருவரை ஒருவர் விட்டு பிரிந்தனர். மீண்டும் அவர்கள் சேருவார்கள் என ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது வரை வெறும் ஏமாற்றமே மிச்சமாக இருக்கிறது.

ஆனால் தினேஷ் கண்டிப்பாக தனது மனைவியுடன் சேர்ந்து விடுவேன் என்று கூறி வந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர், ரசிகர்களுக்கு ஷாக்கிங் செய்தியை கூறினார். அதாவது இனிமேல் ரஷிதா எனக்கு வேண்டாம். நான் என்னுடைய அடுத்த வாழ்க்கையை தேடி போக போகிறேன் என்று கூறினார். இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தம் அடைந்த நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அதாவது நடிகை ரஷிதா ஒரு கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படம் வெளியான பின்னர் ஒரு கன்னட இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

500 காளை மாடுகள் திமிற.., 300 வீரர்கள் அடக்க., கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் – தமிழக முதல்வர் இன்று திறந்து வைப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *