ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை. தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். யாத்திரையின் கடைசி நாளில் மும்பையில் பேரணி நடத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என நவநிர்மாண் சேனா எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மராட்டிய நவநிர்மாண் சேனா ராகுல் காந்திக்கு எச்சரிக்கை :
அதாவது மும்பையின் தாதர் வெஸ்ட் பகுதியில் சாவர்க்கர் நினைவிடத்திற்கு எதிரில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்காவில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேரணியின் போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசக்கூடாது என ராஜ் தாக்ரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனா தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 2024 ! தேர்தல் தேதி குறித்து அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம் – தேர்தல் எப்போது நடைபெறும் அறிவிப்பு இதோ !
இது குறித்து நவநிர்மாண் சேனா செய்தி தொடர்பாளர் பேசுகையில் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசினால் மஹாராஷ்டிராவில் உள்ள 14 கோடி மக்களும் ராகுல் காந்தியை எந்த பகுதிக்குள்ளும் நுழைய அனுமதிக்க மாட்டார்கள். மேலும் சாவர்க்கர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தால் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.