
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
அதே போல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதுமட்டுமின்றி வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. chance of rain in 9 districts
Also Read: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இறுதிப் போட்டி எப்போது? எங்கே? வெளியான முக்கிய அறிவிப்பு!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திண்டுக்கல், பெரம்பலூர், மயிலாடுதுறை, அரியலூர், ராமநாதபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை