Home » சினிமா » 2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா - பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

சீரியல் நடிகை ஆல்யா மானசா சமீபத்தில் வீடு கட்டிய நிலையில், தற்போது 2 கோடிக்கு போட் ஹவுஸ்  ஒன்றை சொந்தமாக வாங்கிய -தாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்யா – சஞ்சீவ்:

மானாட மயிலாட என்ற டான்ஸ் ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆல்யா மானசா. அவர் நடித்த முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி அதே சேனலில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்தார். அதில் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.

இதையடுத்து சன் தொலைக்காட்சி பக்கம் சென்ற அவர் இனியா என்ற தொடரில் நடித்தார். இந்த சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது. இவர் ராஜா ராணி சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் நடிப்பை தாண்டி யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். சமீபத்தில் இவர்கள் கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு ஒன்று கட்டினார்.

இந்நிலையில் ஆல்யா மானசா புதிய தொழிலை ஆரம்பித்து உள்ளார். அதாவது, கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழாவில் தினசரி ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் விசிட் செய்து வருகின்றனர். குறிப்பாக அங்குள்ள  போட் ஹவுஸ் மிகவும் பிரபலம், இங்கு விடுமுறையை கழிக்க இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இதை புரிந்து கொண்ட, ஆல்யா மானசா தற்போது சொந்தமாக போட் ஹவுஸ் ஒன்றை வாங்கி இருக்கிறாராம். அந்த போட் ஹவுஸின் விலை ரூ. 2 கோடியாம்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?

சூரி படத்தில் பொன்னியின் செல்வன் பட நடிகை – அடேங்கப்பா இந்த ஹீரோயினா!

சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

பிக்பாஸ் தொகுப்பாளருடன் ஒன் நைட் ஸ்டாண்ட் – உண்மையை உடைத்த பிரபல நடிகை!

விஜய் டிவிக்கு தாவிய எதிர்நீச்சல் நடிகை – டிஆர்பிக்காக VIJAY TV போட்ட வலை!

பிக்பாஸ் 9வது வாரம் எலிமினேஷன் – ஜோடி புறாவை பிரித்த மக்கள் – யார் தெரியுமா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top