பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் ஆடையை நீதிபதி கழற்ற சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடைகளை கழட்டுமா – பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினப் பெண்
இன்றைய காலகட்டத்தில் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகமாகி கொண்டே தான் இருக்கிறது. இதை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்த போதிலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில் நீதி கேட்டு போன பெண் ஒருவரை நீதிபதி ஆடையை கழற்ற சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கரௌலி மாவட்டத்தில், பட்டியலினப் பெண் ஒருவர் தன்னை கடந்த மாதம் மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தப்பி சென்றுவிட்டார் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஹின்டாவுன் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மாவட்ட நீதிபதி முன் புகார் அளித்த பெண் ஆஜர்படுத்தப்பட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆடைகளை கழற்றி காயங்களை காட்ட சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் கோர்ட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து நீதிபதி கேட்டதை குறித்து பெண் கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் மாஜிஸ்திரேட் மீது IPC மற்றும் SC/ST (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் பிரிவு 345 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.