ரஜினிகாந்த்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் சென்னை வடபழனியில் நடந்த தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசியதாவது, ” நான் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக எந்த ஒரு திறப்பு விழாவிற்கும் சென்றதில்லை.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதற்கு காரணம் நான் திறந்து வைத்தால், அது என்னுடையது என்றும் அதில் நான் பார்ட்னர் என்றும், பினாமி பெயரில் நடத்துகிறேன் என்று பேச்சுக்கள் எழுந்தன. அதனால் தான் நான் எந்த ஒரு திறப்பு விழாவிற்கும் கலந்து கொள்ள மாட்டேன். ஆனால் இங்க வந்ததுக்கு காரணம் மருத்துவர்கள் தான். பல மருத்துவமனைகளில் என்னுடைய உடலை சரி செய்து கொடுத்துள்ளார்கள். மருத்துவமனை என்பது மிகவும் முக்கியம். அபார்ட்மெண்ட் விளம்பரத்தில் கூட பக்கத்தில அது இருக்கு இது இருக்கு என்று கூறுவார்கள், ஆனால் மருத்துவமனை இருக்கா என்று கூறமாட்டார்கள். மேலும் மருத்துவத்தில் கூட சில அரசியல் உள்ளது. ஏன் குழந்தை குடிக்கும் மருந்தில் கூட கலப்படம் பண்றாங்க. அவுங்களை சாகுற வரைக்கும் ஜெயில்ல போடணும் சார், தேர்தல் நேரம் வேற, எது பேசினாலும் பயமா இருக்கு சார்” என்றார்.