ராஜீவ் காந்தி கொலை வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து ரிலீஸாகி வந்த ஏழு பேரில் ஒருவர் தான் சாந்தன். கிட்டத்தட்ட 30 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். கடந்த ஆண்டு வெளியே வந்த இவரை, இலங்கைக்கு அனுப்பாமல் அவர் சிறை இருந்த திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக அங்கு ஒரு தனி மனிதனுக்கு தேவையான எந்த ஒரு வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இப்படி தான் அவர் அங்கு இருந்து வந்தார் என்று அவருடைய வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அவர் இன்று இரவு தான் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக இலங்கைக்கு செல்ல இருந்தார். ஆனால் அதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.