ராஜ்யசபா தேர்தல் 2024:  பன்னிரண்டு இடங்களுக்கு செப்டம்பர் 3ல் எலக்சன் - வெளியான முக்கிய அறிவிப்பு!ராஜ்யசபா தேர்தல் 2024:  பன்னிரண்டு இடங்களுக்கு செப்டம்பர் 3ல் எலக்சன் - வெளியான முக்கிய அறிவிப்பு!

Breaking News: ராஜ்யசபா தேர்தல் 2024: சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக இருக்கும் 12 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற செப்.,3ம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ராஜ்யசபா தேர்தல் 2024

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” சமீபத்தில் தெலுங்கானா ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த கேசவ ராவ், ஒடிசா ராஜ்யசபா எம்.பி யாக இருந்த மம்தா மோகன்தா ராஜினாமா செய்தனர்.

அதேபோல், கமக்யா பிரசாத்(அசாம்), சர்பானந்தா சோனாவால், மிசா பார்தி(பீஹார்), விவேக் தாகூர், தீபேந்தர் சிங் ஹூடா(ஹரியானா), ஜோதிராதித்ய சிந்தியா(மத்திய பிரதேசம் ), உதயன்ராஜே போன்ஸ்லே(மஹாராஷ்டிரா), பியூஷ் கோயல், கே.சி.வேணுகோபால்(ராஜஸ்தான்),  பிப்லாப் குமார்(திரிபுரா) ஆகிய ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்கள், தற்போது லோக்சபா எம்.பி.,யாக தேர்வாகி உள்ளனர். இதனால் 12 ராஜ்யசபா இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: 12000 ஊழியர்களை வேலை விட்டு தூக்கிய டெல் நிறுவனம் – பின்னணி காரணம் என்ன?

இந்நிலையில் அவற்றுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 3ல் நடக்க இருக்கும் இந்த தேர்தலின் வேட்புமனு தாக்கல் வருகிற ஆக.,14ல் தொடங்கி ஆக.,21ல் நிறைவடைகிறது. இதனை தொடர்ந்து ஆக.,27 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள். செப்.,3ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நிலையில்  அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. rajya sabha election 2024

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024

சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்

மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்

வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *