பிரபல நடிகையின் சகோதரர் அதிரடி கைது - போதைப்பொருள் கடத்தலில் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்!பிரபல நடிகையின் சகோதரர் அதிரடி கைது - போதைப்பொருள் கடத்தலில் சிக்கி சின்னாபின்னமான சம்பவம்!

Breaking News: பிரபல நடிகையின் சகோதரர் அதிரடி கைது: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவருடைய சகோதரர் தான் அமன் பிரீத் சிங். இந்நிலையில் இவரை குறித்து தற்போது ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது அமன் பிரீத் சிங்கை போதைப்பொருள் வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்த நிலையில், உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் போதைப்பொருள் கடத்தல் முயற்சியை முறியடித்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத் சிங் உள்பட 5 பேர் கைது அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Also Read: மக்களை தேடி நடைபயணம் செல்லும் தவெக தலைவர் விஜய் – 4 மண்டல மாநாடுகள் எப்போது?

மேலும் அவர்கள் தங்கியிருந்த நரசிங்கியின் ஹைதர்ஷாகோட்லாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட போது, ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 199 கிராம் கோகோயின், 2 பைக்குகள் மற்றும்  2 பாஸ்போர்ட்கள், 10 செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த வருடமே ரகுல் ப்ரீத் சிங் தம்பிக்கு போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சம்மன் அனுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. cinema news – kollywood cinema

ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம் – ஒரு பாடல் பாடி 25 கோடி வாங்கிய சிங்கர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *