பொதுவாக ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா பண்டிகை நாட்களிலோ அரசு பொது விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற ஜனவரி 22ம் தேதி பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி என்ற பகுதியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கோவிலின் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்பட இருக்கிறது. எனவே அந்த நாளில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வருக்கு பல கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே அந்த நாளில் பொது விடுமுறை விடப்படுமா? என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த ராமர் கோவிலை பிரதமர் மோடி திறக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.