ராம நவமி விழா: அயோத்தி ராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம்: கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாலராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடங்கிய நாளில் இருந்து இந்த கோவிலுக்கு தினசரி பெரும்பாலான மக்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது ராமர் கோவிலில் ராமநவமி விழா நடைபெற்று வருகிறது. மேலும் ராமநவமி விழாவின் 9-வது நாளான இன்று (17.04.2024) ராம் லல்லாவின் சூரிய அபிஷேக மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் இன்று சரியாக பகல் 12.16 மணி அளவில் கோவில் கருவறையில் கம்பீரமாக வீற்றிருக்கும் 51 இன்ச் உயரம் கொண்ட பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இதை பார்த்த பக்தர்கள் மெய் சிலிர்த்துப் போனார்கள். அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரிய கதிர்கள் ராமர் சிலையின் நெற்றியில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநவமி திருவிழா நடைபெற்று வருவதால் அடுத்தடுத்து பக்தர்கள் கோவிலை நோக்கி வருகின்றனர்.