ரம்ஜான் பண்டிகை வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
ரம்ஜான் மற்றும் வார இறுதி விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்
பொதுவாக ஏதேனும் விசேஷ பண்டிகளிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ வெளியூரில் வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜூ அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி வரும் ஏப்ரல் 13, 14 ஆகிய தேதிகளில் வார விடுமுறை என்பதால் வெளியூரில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இன்று (ஏப்ரல் 10) 315 பேருந்துகளும், அதே போல் 12ஆம் தேதி 290 பேருந்துகளும் மற்றும் 13ஆம் தேதி 340 பஸ்களும் இயக்கப்படுகின்றன. அதேபோல் சென்னை கோயம்பேட்டில் இருந்து வேளாங்கன்னி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல 3 தினங்களுக்கு தலா 40 பேருந்துகள் என 120 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் மக்கள் சந்தோஷத்தில் விடுமுறை நாட்களை கொண்டாட இருக்கின்றனர்.