தேவர் மற்றும் இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு மாதங்கள் 144 தடை உத்தரவு பிறக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு மாதங்கள் 144 தடை உத்தரவு
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பரமக்குடி :
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டுதோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தைமானது குருபூஜையாக கொண்டாடப்படுகிறது.
அதே சமயம் பசும்பொன் பகுதியில், அக்டோபர் 30ம் தேதியன்று முத்துராமலிங்க தேவரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து இந்த இரண்டு தினங்களை ஒட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொள்வார்கள்.
144 தடை உத்தரவு :
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 9 ம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செப். 4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !
அவ்வாறு 144 தடை உத்தரவு அமலாகும் பட்சத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.