உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் வருகிற 22ம் தேதி பிரமாண்டமாக திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தனது வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்த ஒரு மூதாட்டி செய்த விரதம் அனைவரையும் தூக்கிவாரி போட்டுள்ளது. அதாவது கடந்த 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும் அதுவரை மௌன விரதம் இருப்பேன் என சரஸ்வதி தேவி என்ற மூதாட்டி உறுதி எடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதன்படி தினசரி 23 மணி நேரம் விரதம் இருந்து மதியம் ஒரு மணி நேரம் மட்டும் பேசி கொள்வாராம். இதனை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அடிக்கல் நாட்டி சமயத்தில் இருந்து அவர் 24 மணி நேரமும் மௌன விரதம் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வருகிற 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட இருக்கும் நிலையில் அன்றுடன் தனது மௌன விரதத்தை கலைக்க இருப்பதாக சரஸ்வதி தேவி தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மௌன விரதம் இருந்த அந்த மூதாட்டியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.