குண்டு வெடிப்பு விவகாரம்
பெங்களூரில் மிகவும் பேமஸ் ஹோட்டலான ராமேஸ்வரம் கபே என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. சொல்லப்போனால் இந்த கடைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு உணவு வாங்குவது போல் கடைக்குள் வந்து ஒரு மர்ம நபர் வெடிக்க கூடிய மர்ம பொருள் ஒன்றை வைத்து விட்டு சென்றுள்ளார். அவர் அங்கிருந்து சென்ற சில மணித்துளிகளில் அந்த மர்ம பொருள் வெடித்து சிதறியது. இதில் சில பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிசிடிவை பார்த்து குற்றவாளியை தேடும் பணியில் இறங்கினர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் வெடித்த குண்டின் ரகத்தை அறிந்து சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த மர்ம பொருளில் RDX போன்ற உயர்தர வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தடயவியல் சோதனை மூலம் எந்த வகையான வெடிமருந்துகள் என்பதை கண்டுபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் குற்றவாளியை இன்னும் சில நாட்களில் நெருங்கி விடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.