பெங்களூர் ஹோட்டலில் வெடிகுண்டு
பெங்களூரில் பேமஸ் கடையான ராமேஸ்வரம் கபே என்ற பிரபல ஹோட்டலில் நேற்று பிற்பகல் சரியாக 1.05 மணியளவில் திடீரென மர்ம பொருள் வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஹோட்டலில் தீ வேகமாக பரவ தொடங்கிய நிலையில் அங்கிருந்த பலர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அனைத்து அங்கு சிக்கியவர்களை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த ஹோட்டலில் சாப்பாடு வாங்குவது போல் வந்து வெடிக்கும் மர்ம பொருளை வைத்து விட்டு சென்றதாக கூறப்பட்டது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அப்போது எடுக்கப்பட்ட சிசிடிவி கேமரா வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, “உணவகத்தில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் வெடிகுண்டு வைத்த மர்ம நபரின் புகைப்படம் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்”என்றார்.