எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் 8 பேர் கைது
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழக மீனவர்கள் :
தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படை நடவடிக்கை :
இதனை தொடர்ந்து வடக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட சூறைக்காற்று காரணமாக கடந்த ஒரு வாரமாகவே மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தனர். அந்த வகையில் நேற்று காலை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 430-க்கு மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் அனுமதி சீட்டு பெற்று ராமேஸ்வரம் மீன் பிடித்துறை முகத்திலிருந்து தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்களை கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மத்திய அரசின் சர்வ சிக்க்ஷ அபியான் திட்டம் – தமிழ்நாட்டிற்கான நிதி நிறுத்திவைப்பு !
இதனை தொடர்ந்து எட்டு மீனவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த விசாரணைக்குப் பின்னர் மீனவர்கள் அனைவரும் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.