தென் இந்தியாவின் காசி என்று அழைக்கப்படும் ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு. கோவிலில் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு நாளை விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனால் நாளை பகல் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமேஸ்வரத்தில் நாளை பகல் முழுவதும் நடை அடைப்பு
விபீஷணர் பட்டாபிஷேகம்:
தென் காசியாக கருதப்படும் ராமேஸ்வரம் கோவிலில் ஒவ்வொரு வருடமும் இராமலிங்க பிரதிஷ்டை திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன் படி இந்த வருடம் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று தங்க ராவண சம்ஹார நிகழ்ச்சி மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. நாளை பகல் 1.30 மணி அளவில் தனுசுகோடி கோதண்டராம கோவிலில் விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான இராமலிங்க பிரதிஷடை 16 ந் தேதி ஞாயிறு பகல் 12.30 மணி அளவில் நடைபெற உள்ளது.
மதுரை காலதேவி அம்மன் கோவில் – கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றும் அதிசயம் !
பக்தர்களுக்கு தரிசனம் இல்லை:
இராமலிங்க பிரதிஷடை திருவிழாவின் 2 வது நாளான நாளை சனிக்கிழமை கோவிலில் இருந்து ராமபிரான் மற்றும் விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சிக்காக தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் நாளை அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3 முதல் 3.30 மணி வரை ஸ்படிக லிங்க தரிசனம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று காலை 7 மணிக்கு நடை சாத்தப்படும்.அதனால நாளை காலை 7 மணி முதல் 5 மணி வரை கோவிலில் தீர்த்த கிணறுகளில் குளிப்பதற்கும், சுவாமி தரிசனம் செய்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.
சிவனை வழிபாடும் போது நாம் செய்யக்கூடாதவை
திருப்பதி மொட்டை: நாம் செலுத்தும் முடி காணிக்கை என்னவாகிறது