ரம்யா கிருஷ்ணனை வம்சி விவாகரத்து செய்கிறாரா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன். 1983-ஆம் ஆண்டு வெளியான ‘வெள்ளை மனசு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ரம்யா கிருஷ்ணனை வம்சி விவாகரத்து செய்கிறாரா:
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் அவர் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இப்பொழுது கூட நின்னு பேசும். அந்த அளவுக்கு அந்த கேரக்டரில் அற்புதமாக வில்லியாக நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இப்பொழுது அவர் அம்மா உள்ளிட்ட குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி அவர் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தார். இதற்கிடையில் இயக்குனர் வம்சி-யை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார். இப்படி இருக்கையில் கடந்த சில நாட்களாக வம்சியும் ரம்யாவும் பிரிந்து வாழ்வதாகவும், அவர்கள் விவாகரத்து செய்ய போவதாகவும் இணையத்தில் தகவல்கள் தீயாய் பரவி வந்தது.
ரோலக்ஸ் தோற்றத்தில் நடிகர் சதீஷ் – தமிழ் படம் 3 வர போகிறதா?
இதனால் தான் ரம்யா சென்னையிலும், வம்சி ஹைதராபாத்திலும் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வதந்திக்கு சேர்த்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வம்சி. அதாவது, ” தற்போது ஷூட்டிங்கிற்காக தான் ஹைதராபாத்தில் இருக்கிறேன், ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். அதனால் தான் நாங்கள் பிரிந்து இருக்கிறோம். எனவே இதை வைத்து பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
கவினின் `ப்ளடி பெக்கர்’ பட டிரைலர் நாளை வெளியீடு
பிக்பாஸ் 8ல் வெளியேறும் 2வது போட்டியாளர் யார்?
“லப்பர் பந்து” அக்டோபர் 18ம் தேதி ஓடிடியில் ரிலீஸ் – OTTயில் சிக்ஸர் அடிக்குமா?
ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் தேதி மாற்றம்