இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் OSC ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பெண்களுக்கு அரசு வேலை 2024 சார்பில் வழக்கு பணியாளர் மற்றும் மூத்த ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Rs.18,000 முதல் Rs. 22,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். மேலும் இந்த பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதனை தொடர்ந்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
நிறுவனம் | OSC ஒருங்கிணைந்த சேவை மையம் |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலை |
வேலை இடம் | இராணிப்பேட்டை |
தொடக்க தேதி | 09.07.2024 |
கடைசி தேதி | 23.07.2024 |
பெண்களுக்கு அரசு வேலை 2024
அமைப்பின் பெயர் :
இராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் :
மூத்த ஆலோசகர் (Senior Counselor)
வழக்கு பணியாளர் (Case Worker)
சம்பளம் :
Rs.18,000 முதல் Rs. 22,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் இருந்து Master’s of Social Work, Counselling, Psychology அல்லது Development Management துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
இராணிப்பேட்டை – தமிழ்நாடு.
ICSIL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2024 ! 12வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
விண்ணப்பிக்கும் முறை :
இராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் உடன் இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம்,
4வது தளம், C பிளாக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
இராணிப்பேட்டை மாவட்டம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.07.2024
தேர்ந்தெடுக்கும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பான அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் அல்லது ஆலோசனை வழங்குதல் போன்ற ஏதேனும் ஒன்றில் முன் அனுபவம் பெற்ற பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.