தமிழ்நாடு ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ள நிலையில் அடுத்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸின் வாகன உற்பத்தி தொழிற்சாலை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
தமிழ்நாடு அரசு :
இந்திய அளவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாடு தற்போது தொழில்துறையில் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதனையடுத்து அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக் கூடிய உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களையும், மேலும் பெருமளவிலான வேலை வாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு தற்போது எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை :
இதனையடுத்து தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைவு – மத்திய பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து அதிரடி சரிவு !
நவீன கார்கள் உற்பத்தி :
இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலையில் ஜாகுவார், லேண்ட் ரோவர் போன்ற உயர் ரக கார்களை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.