தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல்: கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழைப் பொழிவு பரவலாக பெய்து வருகிறது. மேலும் மழையுடன் சேர்ந்து டெங்கு, காலரா போன்ற வியாதிகளும் பரவி வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது, லெப்டோஸ்பைரோசிஸ் எனப்படும் எலிக் காய்ச்சல் பாதிப்பு மக்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 1500 பேருக்கு எலிக்காய்ச்சல்
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மேலும் இந்த நோய் விலங்குகளிடம் இருந்து தான் பரவி வருகிறது. குறிப்பாக எலிகள் முலமாக தான் ஈசியாக மனிதர்களிடையே பரவுவதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள மாநில பொதுச் சுகாதார ஆய்வகம் உட்பட 10 க்கும் மேற்பட்ட ஆய்வங்கள் அமைத்து எலி காய்ச்சலை கண்டறிந்து வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோருக்கு எலிக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மெரினாவில் அக்டோபர் 6 விமான சாகச நிகழ்ச்சி – போக்குவரத்தில் அதிரடி மாற்றம்
மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே நோய் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பாதிப்பு 3,002-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஸ்போர்ட் சேவை வெப்சைட் 4 நாட்கள் இயங்காது
கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் – அரசு அதிரடி அறிவிப்பு!
ரூ.4000க்கும் மேல மின் கட்டணம் வருதா?