பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, சினிமாவில் மட்டும் தோல்வியடைந்த ரத்தன் டாடா BSS என்ற பேனரில் விக்ரம் பட் என்பவருடன் சேர்ந்து ஏத்பார் என்ற பெயரில் இந்தி திரைப்படம் ஒன்றை தயாரித்தார். இந்த திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.
சினிமாவில் மட்டும் தோல்வியடைந்த ரத்தன் டாடா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
ரத்தன் டாடா :
டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
தற்போது அவருக்கு வயது 86. அந்த வகையில் அவரது மறைவுக்கு பலரும் தங்களின் இரங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனையத்து இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா கடந்த புதன்கிழமை அன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் புதன்கிழமை இரவு காலமானார்.
சினிமாவில் மட்டும் தோல்வி :
இந்தியாவின் வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய ரத்தன் டாடா இந்தி திரையுலகில் ஒரு தயாரிப்பாளராக களமிறங்கி தயாரித்த திரைப்படம் தோல்வியை தழுவியது.
இதன் அடிப்படையில் ரத்தன் டாடா களமிறங்கி தோல்வி அடைந்த ஒரே தொழில் சினிமா மட்டும் தான் என்று கூறப்படுகிறது.
கடந்த 2004 ம் ஆண்டு பியர் என்ற ஹாலிவுட் திரைப்படத்தை தழுவி டாடா BSS என்ற பேனரில் விக்ரம் பட் என்பவருடன் சேர்ந்து ஏத்பார் என்ற பெயரில் இந்தி திரைப்படம் ஒன்றை தயாரித்தார்.
ரத்தன் டாடாவின் காதல் கதை – போரால் பிரிந்த லவ் !
இந்த திரைப்படமானது அமிதாப் பச்சன், ஜான் ஆபிரகாம், பிபாஷா பாசு,நடிப்பில் ஒன்பதரை கோடி ரூபாய் செலவில் ஏத்பார் திரைப்படம் தயாரிக்கப்பட்டது.
அந்த வகையில் அந்த படம் உலகம் முழுவதும் 8 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ரத்தன் டாடா கால் வைத்த அனைத்து தொழில்களிலும் வெற்றி பெற்ற நிலையில், இந்த சினிமா தொழில் மட்டும் தோல்வியடைந்துள்ளார்.