ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடை மூலமாக மலிவான விலையில் அரசு கொடுத்து வருகிறது. இதன் மூலம் விலையில்லா அரிசி மற்றும் பாமாயில், சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்களை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் இந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
அதாவது தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் வழங்கப்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மாதத்தின் முதல் வாரத்தில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு விடும். ஆனால் இந்த மாதம் ஆரம்பித்த இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் மக்களுக்கு பருப்பு வகைகள் மற்றும் பாமாயில் வழங்காமல் இருந்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இது குறித்து வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.