ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அரசி, கோதுமை மற்றும் சீனி போன்ற அடிப்படை உணவுப்பொருட்களை கொள்முதல் செய்து தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு குறைந்த விலையில் நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரசின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் நியாய விலைக்கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதில்லை என பல்வேறு பகுதிகளிலிருந்து குற்றம் சட்டப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது நியாய விலைக்கடைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
நியாய விலைக்கடைகளின் நேர விவரம் :
தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் கடைகளின் நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் உள்ள கடைகள் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 7.00 வரை ரேஷன் கடைகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தொழில் பயிற்சி நிலையம் மாணவர் சேர்க்கை 2024 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
பிற மாவட்டங்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்படும் என்றும் கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.