ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் நியாய விலைகடை வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரப்படும் சலுகைகளையும் நியாய விலைகடை வாயிலாக தான் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்
இதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே அரசு தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொகையை அறிவித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது நியாய விலைகடை ஊழியர்களுக்கான போனஸ் குறித்து அரசு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியாய விலைகடை ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்க இருக்கிறது.
2026 காமன்வெல்த் போட்டி – ஹாக்கி & துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்!!
இன்னும் தெளிவாக சொல்ல போனால், நியாய விலைகடை ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.7,000 வரை போனஸ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியாளர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை முந்தைய நாளும், பிந்தைய நாளும் விடுமுறை அறிவித்து சமீபத்தில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலி – மீண்டும் அரங்கேறும் சோகம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி 2024 – 46 ரன்னுக்கு 9 விக்கெட்
ரேஷன் அட்டை தாரர்களுக்கு குஷியான செய்தி
புதிய நீதி தேவதை சிலை திறப்பு – என்னென்ன மாற்றங்கள் தெரியுமா?