பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடை செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காக அத்தியாவசிய தேவை பொருட்களை மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக அரசு வழங்கி வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் மாநில அரசு கொண்டு வரும் திட்டங்கள் சலுகைகள் அனைத்தும் ரேஷன் கடை மூலமாக தான் மக்களிடம் சென்றடைகிறது.
ரேஷன் கடை வெள்ளிக்கிழமை(ஜனவரி 10) செயல்படும்.., உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு!!
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததையும் ஏற்கனவே பார்த்தோம். மேலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 2,20,94,585 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி நெரிசல் பலி.., உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதியுதவி.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
அதுமட்டுமின்றி இன்னும் பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்கள் இருக்கும் நிலையில், தற்போது தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்கள் அனைவருக்கும் கிடைத்திடும் விதமாக நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 10) அனைத்து நியாய விலைக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழ்நிலை.., என்ன காரணம் தெரியுமா?
இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் .. முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!
தமிழகத்தில் நாளை (10.01.2025) மின்தடை பகுதிகள்! சென்னை முதல் கன்னியாகுமரி வரை பவர் கட் இடங்கள்!
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!