ஆதார் கார்டு – ரேஷன் பொருட்கள் – தமிழக அரசு: தமிழகத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு மலிவான விலையில் ரேஷன் கடை வாயிலாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில மற்றும் மத்திய அரசு கொண்டு வரும் சிறப்பு சலுகைகளும் இதன் மூலமாகவே வழங்கி வருகின்றனர்.
ஆதார் கார்டு – ரேஷன் பொருட்கள் – தமிழக அரசு
இந்நிலையில் தமிழக அரசு ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ரேஷன் கடைகளில் பொருள் வாங்கும் பொழுது கை விரல் ரேகை, கண் கருவிழி அடையாள சரிபார்த்த பின்னரே வழங்கப்பட்டு வருகிறது.
அப்படி கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாள காணும் போது தோல்வி அடைந்தால், அந்த கார்டுதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையெழுத்து பெற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. எனவே கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படாமல் தொடர்ந்து அரசு வழங்கி வருகிறது.
Also Read: முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு குட் நியூஸ் – ஓய்வூதிய உதவித்தொகையை அறிவித்த அரசு – உடனே Apply பண்ணுங்க!
ஆனால் ரேஷனில் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கைரேகை புதுப்பிக்க வேண்டும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது முற்றிலும் பொய்யான தகவல். ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண் கருவிழி, கைரேகை மறு பதிவு செய்வதற்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிய வாய்ப்பு
PM SHRI திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும்
குஜராத்திற்கு மீண்டும் ரெட் அலர்ட்
HURUN உலக பணக்காரர் பட்டியல் 2024: முதலிடத்தை பிடித்த மும்பை