கிரெடிட் கார்டு
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வாழும் எக்கசக்க மக்கள் கிரெடிட் கார்டு பயனாளிகளாக இருந்து வருகின்றனர். அவர்களின் விருப்பத்திற்கேற்ப பல வசதிகளையும் வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, இனிமேல் கிரெடிட் கார்டுகளை வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கடன் அட்டை வலையமைப்புகளை திணிக்க முடியாது. அவர்கள் நெட்வொர்க் மதிப்பை தெரிந்து அதற்கேற்ப அவர்கள் கேட்கும் கடனை கொடுக்கும் வசதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதன் மூலம் கிரெடிட் கார்டு பயனர்களுக்கும், உள்நாட்டு அட்டை நெட்வொர்க் ரூபேக்கும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அட்டையை புதுப்பிக்கும் போது அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் ரூபே, டைனர்ஸ் கிளப்,விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை இந்தியாவில் அட்டை நெட்வொர்க்குகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த புதிய வசதி மூலம் ரூபே நெட்வொர்க் பெரிதும் பயனடையலாம். அதுமட்டுமின்றி சமீபத்தில் RuPay கிரெடிட் கார்டு UPI பணம் செலுத்தும் வசதியை பெற்றது குறிப்பிடத்தக்கது.