Home » செய்திகள் » நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

NEET UG 2024 நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மறு தேர்வு: நடப்பாண்டில் மே 5ம் தேதி நடைபெற்ற நீட்(Neet) தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது என பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக பெரும்பாலான மாணவர்கள் புகார்களை முன் வைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நடந்து முடிந்த இந்த நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக 1500 மாணவர்களுக்கு  கருணை மதிப்பெண் வழங்கியதாக தேசிய தேர்வு முகமை மீது மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் தேசிய தேர்வு முகமை மறு நீட் தேர்வுக்கு ஒப்புக்கொண்டது. அதன்படி நடப்பாண்டு நீட் தேர்வில் கருணை மதிப்பெண் அடிப்படையில் மார்க் கொடுக்கப்பட்ட 1500 மாணவர்களுக்கு வருகிற ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மறுதேர்வு முடிவுகள் வருகிற ஜூன் 30ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும் மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். neet exam 2024 – neet reexam 2024 – nta – National Examinations Agency

புதுச்சேரி விஷவாயு எதிரொலி… இரண்டு 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top