8வது திருமணத்திற்கு மணமகன் தேவை.., மணப்பெண்ணாக தயாராகும் 112 வயது மூதாட்டி.., 90ஸ் கிட்ஸ் குமுறல்!!8வது திருமணத்திற்கு மணமகன் தேவை.., மணப்பெண்ணாக தயாராகும் 112 வயது மூதாட்டி.., 90ஸ் கிட்ஸ் குமுறல்!!

தற்போதைய காலகட்டத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பழமொழி சுவட்டில் மட்டுமே இருக்கிறது. பலரும் இரண்டு மூன்று கல்யாணம் செய்து வருகிற சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது அந்த வகையில் ஒரு மூதாட்டி ஏழு கல்யாணம் முடித்த நிலையில், தற்போது 8வது திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மலேசியாவைச் சேர்ந்த  சிதி ஹவா (112 வயது) மூதாட்டி என்பவர் கூறியிருப்பதாவது, எனக்கு ஏழு முறை திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் எனக்கு நான்கு மகன்களும், 16 பேரக் குழந்தைகளும் உள்ளனர். எனக்கு 112 வயது ஆன போதிலும் எல்லா வேலைகளையும் நானே செய்து கொள்கிறேன். என்னோட கணவர்கள் சிலர் இறந்து விட்டனர். சிலர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். தற்போது என்னை பார்த்துக் கொள்ள ஒரு கணவன் தேவை. 8வது முறை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *