உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னைக்கு ரெட் அலெர்ட் ?உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - சென்னைக்கு ரெட் அலெர்ட் ?

தற்போது உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இதனால் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டள்ளது. மேலும் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஒன்று உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுவதற்கான சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று மிதமானது முதல் கனமழை வரையில் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாளை மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் இன்டெர்ன்ஷிப் திட்டம் – 1.55 லட்சம் பேர் விண்ணப்பம் !

அதனை தொடர்ந்து வரும் அக்.16ஆம் தேதி சென்னையில் அதிக கன மழை சுமார் 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நாளை மறுதினம் சென்னைக்கு சிவப்பு நிற எச்சரிக்கை (Red Alert ) விடுக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *