அதிகனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள், அந்த வகையில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இப்போதே வேளச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தில் கார்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர். Red alert for Heavy Rain in Chennai
சென்னை பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
கனமழை எச்சரிக்கை :
தற்போது சென்னையில் அதிகனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
இந்நிலையில்பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இப்போதே வேளச்சேரி மேம்பாலத்தில் தங்களது கார்களை நிறுத்தத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பரில் பெய்த பெருமழையின்போது ஏராளமான கார்கள் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த ஆண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத அளவில் பெருமழை பெய்ததை தொடர்ந்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது.
பாலங்களில் கார்களை நிறுத்திய பொதுமக்கள் :
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் படி சென்னை மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொது மக்களும் தங்கள் உடைமைகளை பாதுகாக்கும் வழிமுறைகளை கையாளத் தொடங்கி உள்ளனர்.
சென்னையில் 180 வெள்ள அபாய பகுதிகள் – மாநகராட்சி உத்தரவு !
அந்த வகையில் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இப்போதே வேளச்சேரி ரயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தில் கார்களை கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.
மேலும் வேளச்சேரி மேம்பாலத்தின் இருபுறமும் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து போலீசார் கார்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
சமீபத்திய செய்திகள் :
சபரிமலைக்கு – இந்த ஆண்டு ஆன்லைன் பதிவு கட்டாயம் இல்லை
ஜம்மு காஷ்மீரில் குடியரசுத்தலைவர் ஆட்சி வாபஸ் – அறிவிப்பு வெளியீடு !
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – சென்னைக்கு ரெட் அலெர்ட் ?
10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 2025 வெளியீடு