ரெடின் கிங்ஸ்லி:
ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகியவர் ரெடின் கிங்ஸ்லி. இந்த திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் தனது நகைச்சுவையினால் அனைவரையும் கவர்ந்தார். இப்படத்திற்கு பின்னர் நகைச்சுவை நடிகராக பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதி:
இதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. இதனையடுத்து விஜயுடன் ‘பீஸ்ட்’ மற்றும் ரஜினியுடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டு சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி சங்கீதாவுக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சியை ரெடின் நடத்தி இருந்தார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்தி இருந்தனர்.
சூர்யா நடிக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவு! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு!
பெண் குழந்தை பிறந்தது:
இந்த நிலையில் ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து ரெடின் கிங்ஸ்லி தனது மகளை கையில் வைத்துக் கொண்டிருக்கும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை சங்கீதா தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.