பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம். பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் உள்ளிட்ட 19 வகையான மருத்துவ துணை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம்
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
மருத்துவ துணை படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் :
பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தின் வழியாக இன்று முதல் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 19 வகையான துணை மருத்துவப்படிப்புகளுக்கு இன்று பகல் 12 மணி முதல் விண்ணப்பபதிவு தொடங்கும் என்றும், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 16 முதல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ? – முழு தகவல் இதோ !
மேலே குறிப்பிட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணையதளத்தின் வழியாக ஜூன் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் காணலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க – www.tnmedicalselection.net