சக்க போடு போட்டானே., 'தாஸ்' பட நாயகியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?சக்க போடு போட்டானே., 'தாஸ்' பட நாயகியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா?

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வரும் இவர் கெரியரில் தவிர்க்க முடியாத படமாக இருந்து வரும் திரைப்படம் என்றால் அது தாஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரேணுகா மேனன். கேரளாவை சேர்ந்த இவர் மலையாள படங்களில் என்ட்ரி கொடுத்த அவர் தற்போது  தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

பரத் நடித்த பிப்ரவரி 14 படத்தில் தமிழில் அறிமுகமான அவருக்கு தாஸ் திரைப்படம் மூலம் தனக்கென ரசிகர்களை உருவாக்கி கொண்டார். மேலும் இந்த படத்தில் வந்த சக்க போடு போட்டானே என்ற பாடல் தற்போது வரை பேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த 2006ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் சூரஜ் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு  சினிமாவை விட்டு விலகினார். மேலும் இந்த தம்பதிக்கு இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவருடைய தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கூரியர் வாகனத்தில் சிக்கிய 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்க நகைகள்.., பறக்கும் படையினர் அதிரடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *