கன்னட சினிமாவின் பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
ஜாமீன்:
சில மாதங்களுக்கு முன்னர் பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தன்னுடைய ரசிகரான ரேணுகாஸ்வாமியை கொலை செய்ததாக கூறி காமாட்சி பாளையா காவல்துறையினர் கைது செய்து பல்லாரி சிறையில் அடைத்தார்கள். இதனை தொடர்ந்து அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
அதன்படி, பெங்களூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 9ம் தேதி நடந்த விசாரணையின் போது தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்திருந்தார். மேலும் நேற்று வரை தர்ஷனுக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று மதியம் 2.30 மணியளவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இப்பொழுது வரை சிறை வாசம் அனுபவித்து வரும் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 9 பேருக்கு தற்போது ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024: தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை பேரா?
PhonePe ஆப்பில் விரைவு கடன் – 48 மணிநேரத்திற்குள் கிடைக்கும் பணத்தொகை!
TVK கட்சி 2வது மாநில மாநாடு – எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!
திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?
24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?