திருவாரூர் மாவட்ட CUTN வேலைவாய்ப்பு 2023திருவாரூர் மாவட்ட CUTN வேலைவாய்ப்பு 2023

  திருவாரூர் மாவட்ட CUTN வேலைவாய்ப்பு 2023. தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது. இங்கு அதிகாரி மற்றும் ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

திருவாரூர் மாவட்ட CUTN வேலைவாய்ப்பு 2023

  அதன் படி இந்த பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை , கல்வி , வயது , சம்பளம் , அனுபவம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.

JOIN WHATSAPP GROUP

  திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ( CUTN – Central University of Tamil Nadu )த்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  1. ஆராய்ச்சி அதிகாரி ( Research Officer )

  2. கள ஆய்வாளர் ( Field Investigator ) பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  1. ஆராய்ச்சி அதிகாரி – 1

  2. கள ஆய்வாளர் – 2 என மொத்தம் மூன்று காலிப்பணியிடங்கள் திருவாரூர் CUTNல் காலியாக இருக்கின்றது.

  1. ஆராய்ச்சி அதிகாரி :

      சமூகப் பணி , பொருளாதாரம் , சமூகவியல் , உளவியல் , பொது ஆரோக்கியம் , சமூக அறிவியல் போன்ற துறைகளில் PhD , MA , M.Phil முடித்தவர்கள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

  2. கள ஆய்வாளர் :

     MA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தமிழ் மொழி அறிவு கட்டாயம் இருக்க வேண்டும்.

தேசிய ஊனமுற்றோர் மேம்பாட்டு நிறுவன வேலைவாய்ப்பு 2023 ! டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் ! 

  CUTNல் காலியாக இருக்கும் ஆராய்ச்சி அதிகாரி மற்றும் கள ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபருக்கு மாத ஊதியமாக ரூ. 15,000 வழங்கப்படும். திருவாரூர் மாவட்ட CUTN வேலைவாய்ப்பு 2023.

  16.11.2023ம் தேதிக்குள் மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

  chitrakp@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகுதியான நபர்கள் தங்களின் CV சமர்ப்பிக்க வேண்டும்.

  16.11.2023 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் நேர்காணல் மூலம் தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்படும்.

  1. அறிமுகக்கடிதம் 

  2. சுய விவரம் 

  3. பாஸ் போர்ட் சைஸ் புகைப்படம் 

  4. புகைப்பட அடையாள அட்டை 

  5. கல்வி சான்றிதழ் ஜெராக்ஸ் ( சுயகையொப்பம் )

  6. பணி அனுபவ சான்றிதழ் ( சுயகையொப்பம் )

  7. ஏதேனும் ஒரு வெளியிடப்பட்டு உள்ள ஆய்வுக்கட்டுரை நகல் 

  Dr. சித்ரா கேபி ( முதன்மை ஆய்வாளர் ) ,

  உதவிப்பேராசிரியர் ,

  சமுகப்பணித் துறை ,

  சமூக அறிவியல் மற்றும் மனிதநேயப் பள்ளி ,

  தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ,

  நீலக்குடி வளாகம் , 

  கங்கலாஞ்செரி , 

  திருவாரூர் – 6110005 ,

  தமிழ்நாடு .

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *