மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு – கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 140% அதிகம் !

மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் வழங்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு. இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI) 2023-2024 ஆம் நிதியாண்டில் மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி வரலாற்றில் வழங்கப்பட்ட மிக உயர்ந்த ஈவுத்தொகையாகும்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ஸ்ரீ சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர்கள் குழுவின் 608 வது கூட்டத்தில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் இருப்புநிலைக் குறிப்பில் 6.5 முதல் 5.5 சதவீத வரம்பிற்குள் CRB இன் கீழ் இடர் ஒதுக்கீடுகள் பராமரிக்கப்பட வேண்டும் என்று இயக்குநர்கள் குழு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதானி நிறுவனம் தமிழ்நாட்டிற்கு நிலக்கரி வழங்கியதில் ஊழல் – தமிழக அரசிற்கு 6000 கோடி இழப்பு என தகவல் !

மேலும் நடப்பு நிதியாண்டில் உபரியாக உள்ள ரூ.2,10,874 கோடியை ரூபாயை மத்திய அரசுக்கு மாற்ற ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஈவுத்தொகையானது 2022-23 நிதியாண்டில் விநியோகிக்கப்பட்ட தொகையை விட 140% அதிகமாகும். கடந்த ஆண்டு ரூ.87,000 கோடியை மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment