வாடிக்கையாளர்களே - ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!வாடிக்கையாளர்களே - ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இந்திய ரிசர்வ் வங்கி 2024-25ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை தற்போது அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் கடனின் ரெப்போ வட்டி விகிதம் குறித்து அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என்றும், இதனால் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரம் கலவையான தோற்றதை தொடர்ந்து வழங்கி வருவதால் தான் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்தால் ஹோம் லோன், வாகன கடன் வாங்குவோருக்கு சுமை அதிகரிக்கும். எனவே இம்முறை வட்டி விகிதம் குறையும் என வாடிக்கையாளர்கள் நினைத்த நிலையில் இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்பு ரெப்போ வட்டி விகிதம் 4.5 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களே குட் நியூஸ்.., இந்த நாளில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *