ரெட்ரோ திரைப்படம்:
ரெட்ரோ திரைப்படத்தின் புதிய பாடல் விரைவில் வெளியீடு: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் ‘ரெட்ரோ.’ மேலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
அத்துடன் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ரெட்ரோ படம் வருகிற மே 1-ம் தேதி வெளியாகவுள்ளது.
JOIN WHATSAPP TO GET CINEMA NEWS
புதிய பாடல் விரைவில் வெளியீடு:
அந்த வகையில் கண்ணாடி பூவே மற்றும் கனிமா பாடல்கள் வெளியாகி மிகவும் வைரலான நிலையில், இப்படத்தின் புதிய பாடல் விரைவில் வெளியாகும் என்று ரெட்ரோ படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் வெளியாகும் சிம்புவின் மாநாடு திரைப்படம் – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்!
மேலும் ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணிகளை சூர்யா முழுவதுமாக முடித்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் வெளியிட்டார். இதனையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைப்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.