இன்றைய திருக்கணிதப்படி நாளை மார்ச் 29ம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான். இந்த பெயர்ச்சியின் காரணமாக ரிஷப ராசியினர் லாப ஸ்தானமாகிய 11-ல் அமர்ந்து பலன் தர இருக்கிறார். இதனால் பல விஷயங்களில் நன்மைகள் பெருகும். ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம் சனி பெயர்ச்சி 2025 || அதிர்ஷ்டம் கொட்ட போகிறது.., பலன்கள் என்னென்ன?
ரிஷப ராசிக்காரர்களுக்கான பலன்கள்:
ரிஷப ராசியினருக்கு இந்த சமூகத்தில் உள்ள பெரிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும் அதன் மூலம் பல ஆதாயங்களும் கிடைக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு புது பொறுப்புகள் தேடி வரும், இதன் மூலம் உங்கள் அந்தஸ்து உயரும்.
குழப்பங்கள் தீரும், குழந்தையில்லா தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். இந்தப் பெயர்ச்சிக்கு பிறகு சனி பகவான் உங்கள் ராசியையும் ராசிக்குக்கு 5 மற்றும் 8-ம் இடத்தையும் பார்க்கிறார்.
இதனால், முன் கோபத்தை அடக்க வேண்டும். உணவில் அதிக கவனம் தேவை. மேலும், சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தூக்கம் கெடும், பிள்ளைகளின் போக்கில் கவனம் செலுத்த வேண்டும்.
சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். ரிஷப ராசியை சேர்ந்த மாணவ மாணவியர் படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் சூழ்நிலை ஏற்படும். உத்தியோகத்தில் பெண்களுக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். புதிய நண்பர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு, அதிக வருமானமும் பெரும் புகழும் கிடைக்கும். இதை வைத்து பார்க்கும் பொழுது ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்ட போகிறது.
பாவங்களை நீக்குவதற்கான வழிமுறைகள்:
தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !
செருப்பை காணிக்கையாக ஏற்கும் பெருமாள் கோவில் தமிழகத்தின் தென் திருப்பதி !
உங்கள் ராசிக்கு கும்பகோணத்தில் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் முழு விபரம் உள்ளே !