பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் தன்னுடைய 45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
காமெடி நடிகர்:
இன்றைய சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து ஹீரோ அவதாரம் எடுத்து வருகின்றனர். அதன்படி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி மற்றும் சதீஷ் ஆகியோர் இந்த லிஸ்டில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த லிஸ்டில் தற்போது புதிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. விஜய் டிவியில் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமாகி, இப்போது பல படங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர் தான். இவர் அஜித், விஜய், தனுஷ், சிம்பு என பல்வேறு ஹீரோக்களுடன் நடித்து உள்ளார்.
ஹீரோவாகும் ரோபோ சங்கர்
இப்படி பிசியாக நடித்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டால் உடல் எடை மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போனார். அதன் பின்னர் அவருடைய குடும்பத்தினர் துணையோடு அதில் இருந்து மீண்டு வந்தார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து போனது. இருந்தாலும் அடித்து பிடித்து, போராடி சினிமா வாய்ப்பை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் புது படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். அதாவது நடிகர் ரோபோ சங்கர் ‘அம்பி’ என்ற படத்தில் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர்?.., 55 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்!!
மேலும் இந்த படத்தை டி2 மீடியா என்கிற நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் என்பவர் தயாரித்து வருகிறார். ஜே. எல்வின் என்பவர் படத்தை இயக்குகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்து வருகிறார். முக்கிய வேடத்தில், ரமேஷ் கண்ணா, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்து வருகிறார்கள். காமெடி கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. ஹீரோவாகும் ரோபோ சங்கர்
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!
டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?
2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!