மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் - ஒருவர் பலி, 5 நபர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் !மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் - ஒருவர் பலி, 5 நபர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் !

தற்போது மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் முதியவர் ஒருவர் பலியானதை தொடர்ந்து 5 பேர் காயமடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்கள் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அத்துடன் ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து சுராசந்த்பூர் மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர் மூலம் நடந்த தாக்குதில் 2 கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை குகி மற்றும் மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதலானது கலவரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

மேலும் இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தொடர்ந்த நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.

டிஜிட்டலில் ரூ.2000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 18% வரி – ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு என தகவல் !

இதனையடுத்து நேற்று மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான பிஷ்ணுபூர் மாவட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று மதியம் ராக்கெட் லாஞ்சர் மூலம் தக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் இந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்தனர்.

இதனை தொடர்ந்து படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ராக்கெட் குண்டு விழுந்த இடத்திற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *