இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார்.நம் நாட்டில் போக்குவரத்தால் ஏற்படும் நெரிசலை குறைக்க ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டம் கொண்டு வரபோவதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் ரோப் கார்
உலகிலே மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலின் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களும் எண்ணிக்கையும் பெருகி கொண்டே செல்கிறது என்று சொல்லலாம்.. அதனால் போக்குவரத்து நெரிசல்கள், விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய அரசு ரோப்வே எனப்படும் தேசிய கயிறு பாதை திட்டத்தை கொண்டு வரஉள்ளது.
அடேங்கப்பா.., நவீனமயமாகும் குத்தம்பாக்கம் திரைப்பட நகரம்.., டெண்டர் கோரிய தமிழக அரசு!!
பொதுவாக இந்த ரோப்கார் முறையை மலை பிரதேசங்களில் அதிகமாக பார்க்க முடியும். அதன்படி இந்தியாவின் மலை பிரதேசங்களான அமர்நாத், கேதர்நாத், காமக்யா, மஹாகாளேஸ்வர் போன்ற கோவில்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கு ‘பர்வதமாலா பரியோஜனா திட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 1.25 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 200 ரோப்வே பாதைகள் அமைக்கப்படும். இந்த 200 ரோப்வே பாதையானது சுமார் 1200 கி.மீ. தூரம் வரை அமைக்கப்படும் என்று மத்திய ஒன்றிய அரசாங்கம் கூறியுள்ளது.